காதல் என்பது ஒரு
தெய்வீக நெருப்பு
அதில் காமம் எனும்
தீப்பந்ததை ஏற்றி
உங்களை நீங்களே எரித்துக் கொள்வது ஏன்
காதல் ஆணையும் பெண்ணையும்
இணைத்து வெளிச்சம் உண்டாக்கப்படும்
மின்சாரம். அதில்
விபத்துக்கள் ஏற்படுவது ஏன்
காதல்
நமக்குள் இருக்கும்
கடவுளை வெளிப்படுத்துகிறது
காமம்
நமக்குள் உறங்கும்
மிருகத்தை தட்டி எழுப்புகிறது.
காதல்
நம்மையே நாம்
பரிசாக தருவது. அதனால்
நாம் எல்லாவற்றையும் அடிகிறோம்
காமம்
மற்றவரிடம் உள்ளதை
பறிப்பது. அதனால்
நாம் எல்லாவற்றையும் இழக்கிறோம்
காதல்
காயங்களிலும் பால் சுரக்க செய்கிறது
காமம்
பால் மடியிலும்
ரத்தம் குடிக்கிறது
காதல்
கடவுளின் கர்ப்பக்கிரகம்
காமம்
சாத்தானின் சன்னிதி
காதல்
வாழ்க்கையாக இருக்கிறது
காமம்
மரணமாக இருக்கிறது.
நீங்கள் எதை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்
வாழ்க்கையையா இல்லை மரணத்தையா