Author Topic: மொறு மொறு காலிஃப்ளவர் 65 (அ) கோபி 65  (Read 1208 times)

Offline RemO


காலி ஃப்ளவர் ஊட்டச்சத்துள்ள ஒரு உணவுப் பொருள். இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அதிகம் உள்ளது. சத்தான உணவு என்பதால் குழந்தைகளுக்கு உணவில் அடிக்கடி செய்து தரலாம். அதுவும் மொறு மொறுப்பான கோபி 65 செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உட்கொள்வர்.

தேவையான பொருட்கள்

பெரிய காலிஃப்ளவர் - 1

கார்ன் ஃப்ளார் மாவு - 4 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

சமையல் சோடா - 1 சிட்டிகை

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க

மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்

கோபி 65 - செய்முறை

காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக வெட்டி கொதிக்கும் வெந்நீரில் சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் போட்டு எடுக்கவும். இதனால் அதில் கண்ணிற்கு தெரியாத பூச்சிகள் இருந்தாலும் இறந்துவிடும். பின்னர் அகலமான பாத்திரத்தில் காலிஃப்ளவரை கொட்டி அதன் மீது கான்ஃப்ளார் மாவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தூவி கலக்கவும். அதிக உலர்வாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து பின்னர் அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர் வாணலியில் எண்ணெயை காயவைத்து அதில் ஊறவைத்த காலிஃப்ளவரை போட்டு பொரித்தெடுக்கவும். மொறு மொறுப்பான கோபி 65 தயார். கொத்துமல்லி தூவி பரிமாறவும்.