நந்தவனத்தில் பூத்த
அழகிய ரோஜாவை
அன்பு பாசமலரை
என் சொல்லி கவர்ந்தாய்....?
முட்களாய் பலர் இருந்தும்
வண்டாய் எப்படி
மொய்த்தாய்....?
இதமாய் நயமாய்
கனிவாய், இனிமையாய் பேசி
பழக நட்பை யாசித்தவனே
விருந்தினனாய் வந்தவனே
நயவஞ்சகனே.....?
வணசோலையின் மலரை
பறித்து சென்றது சரியா...
இது முறையா..
இந்த செயல் தகுமா.....
எங்கேனும் அடுக்குமா....?
உன்னுடைய ஈன செயலால்
அழகு நறுமண சோலைவனம்
அழிந்த பாலைவனமாய்......??