காதல்!.
எத்தனைமுறை உச்சரித்தாலும்
உள்ளுக்குள் ஒருசுகமே
உணர்ந்துபார்...
உனக்கும் புரியும்.
ஆயிரம்பேர் உரைத்திடலாம்
காதலொரு அவஸ்தைஎன்று,
அவஸ்தையிலும் அர்த்தமுண்டு
அனுபவித்தால் புரியும் உண்மை.
பிடிக்காத ஒன்றையும்
பிடிக்கும் என்பாய்,
அவளுக்காக...
பொய்மையின் சொந்தமாவாய்,
உண்மையாக அவளிருந்தும் ...
ஊடல்கள் அதிகமாகும்
காட்சி புலப்ப்படும்வேளை,
தேடல்கள் அதிகமாகும்
காணத் துடிக்கும்வேளை...
பெற்றுக்கொண்டால் வெற்றி
கற்றுக்கொண்டால் தோல்வி
காதலில் யாரும் வீழ்வதில்லை
காதலும் இங்கே அழிவதில்லை...
Naan rasithavai