முதல் நாள் இன்று
பழக்கம் இல்லாத இடம்
புதிய மனிதர்கள்
புதிய காற்று
அனைத்தும் புதிது
உற்சாகத்தோடு ஆரம்பமானது
பட்டாம் பூச்சியாய் பறந்து திரிந்தேன்
வேலை நேரம் முடிந்தது
சோர்வும் என்னோடு ஒட்டிக்கொண்டது
வாழ்கையில் முதல்படி ஏறிய சந்தோஷத்தில்
ஒட்டிக்கொண்ட சோர்வை தூக்கி எறிந்துவிட்டு
‘தனித்து நின்று விட்டேன்’ என்ற பெருமிதம்
மனதும் உற்சாகம் ஆகி விட்டது
இனி என் வெற்றிகள் தொடர
ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.