Author Topic: ~ காளான் மஞ்சூரியன் கிரேவி ~  (Read 434 times)

Online MysteRy

காளான் மஞ்சூரியன் கிரேவி



தேவையான பொருட்கள்:

 காளான் – 200 கிராம் வெங்காயம் – 3 (நறுக்கியது) குடைமிளகாய் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 4-5 (நீளமாக கீறியது) இஞ்சி – 1 இன்ச் (நறுக்கியது) பூண்டு – 8-9 பற்கள் (நறுக்கியது) தக்காளி – 2 (அரைத்தது) வினிகர் – சிறு துளிகள் சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காளானைப் போட்டு,மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* அடுத்து குடைமிளகாய் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி, உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கிளறி, பின் தக்காளி, சாறு, பச்சை மிளகாய், சோயா சாஸ் சேர்த்து பிரட்டி, பிறகு ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, 2-3 நிமிடம் தீயை குறைவில் வைத்து, கிரேவி சற்று கெட்டியாகும் போது இறக்கி விட வேண்டும்.