Author Topic: ~ உருளை கிழங்கு மஞ்சூரியன் ~  (Read 470 times)

Offline MysteRy

உருளை கிழங்கு மஞ்சூரியன்



உருளை கிழங்கு – 1/4 கிலோ ( வேகவைத்து )
பெரிய  வெங்காயம்  – 1  ( நறுக்கியது)
தக்காளி  – 2  ( நறுக்கியது)
அரிசி  மாவு  – 3 ஸ்பூன்
மைதா  மாவு – 3 ஸ்பூன்
இஞ்சி  பூண்டு  விழுது  – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய்  தூள் – 1.1/2 ஸ்பூன்
மல்லி   தூள் –  1. 1/2 ஸ்பூன்
மிளகு   தூள் –  1/2  ஸ்பூன்
புளி கரைசல்   – கோழிக்குண்டு  அளவு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 6 ஸ்பூன்
உப்பு – தேவையான  அளவு 


செய்முறை:

முதலில்  ஒரு  பாத்திரத்தில் இஞ்சி  பூண்டு விழுது, மஞ்சள் தூள்,  மிளகாய் தூள்,  மல்லி தூள் , மிளகு தூள், புளி கரைசல், தண்ணீர் சேர்த்து  நன்றாக  கலக்கிகொள்ளவும்.
அடுத்து  வேகவைத்த  உருளை கிழங்யையும்  அரிசி மாவு,  மைதா மாவு சேர்த்து  கையில்   கலக்கிகொள்ளவும்.
பின்னர்  கடாயில்  எண்ணெய் ஊற்றி  காய்ந்தவுடன்  கலக்கி வைத்த   உருளை கிழங்யை பொன்  நிறமாக வறுத்து கொள்ளவும் .
அடுத்து   கடாயில்  எண்ணெய் ஊற்றி  காய்ந்தவுடன்   கறிவேப்பிலை  வெங்காயம்,  தக்காளி  உப்பு  சேர்த்து நன்றாக வதக்கவும் .
பொறித்து  வைத்த   உருளை கிழங்யை சேர்த்து  2 நிமிடம்  வதக்கவும்
சூடான  சுவையான உருளை கிழங்கு மஞ்சூரியன் ஃப்ரை ரெடி .