Author Topic: ~ நண்டு சூப் ~  (Read 465 times)

Offline MysteRy

~ நண்டு சூப் ~
« on: July 06, 2017, 12:02:24 AM »
நண்டு சூப்



தேவையான பொருட்கள்;

நண்டு 100 கிராம் ;

மீன் 100 கிராம் ;

இறால் 100 கிராம் ;

கேரட் 2;

வெங்காயம் 2;

மிளகு 6;

எண்ணெய் 1/2 குழிக் கரண்டி;

தேவையான அளவு உப்பு.

செய்முறை;

முதலில் அரிந்துகொள்ளவேண்டிய வெங்காயம், கேரட் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் , மிளகை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் நண்டு, மீன், இறால், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, நீர் ஊற்றி உப்பு சேர்க்கவும். காய்கறியும், நண்டு வகையறாக்களும் நன்கு வெந்தவுடன் இறக்கி நண்டு, மீன், இறால் இவைகளை வெளியே எடுத்து சூப்பை பறிமாறவும். பறிமாறும்போது, ஒரு துண்டு நண்டையோ, மீனையோ, இறாலையோ சேர்த்து விருப்பத்துக்கேற்றவாறு பரிமாறலாம்.

நண்டு ரசத்தைப் போலவே ,நண்டு சூப்பும் உடலுக்கு தெம்பு தரும். இதை சாப்பிடதும் ஜலதோஷம் பிடித்திருந்தால், கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும்