Author Topic: ~ குழந்தைகள் அதிகளவு சாக்லெட் சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள் ~  (Read 292 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழந்தைகள் அதிகளவு சாக்லெட் சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்



குழந்தைகளுக்கு சாக்லெட்டை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால், அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பிரச்சனைகளை கூட உண்டாக்கி விடும்.

குழந்தைகளின் மீது சாக்லெட்டின் தாக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளும் போது, எந்தளவுக்கு சாக்லெட் உட்கொள்ளுவது நல்லது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மிதமான அளவில் அவ்வப்போது சாக்லெட்களை உண்ணுவது உங்கள் குழந்தைக்கு தீங்கை விளைவிக்காது. நல்ல தரமுள்ள டார்க் சாக்லெட் மற்றும் கொக்கோவில் இருக்கும் உடல்நல பயன்களை எடுத்துக்காட்ட பல ஆய்வுகள் உள்ளது. அதனால் சாக்லெட் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நேர்மறையான பங்களிப்பை அளிப்பது கண்கூடு.

ஆனால் பொதுவாகவே நாம் நம் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த டார்க் சாக்லெட்களை வாங்கி கொடுப்பதில்லை – அப்படி செய்தால் சர்க்கரை அதிகமுள்ள மில்க் சாக்லெட்களுக்கு அடிமையாகி அவர்கள் உடநலம் பாதிக்கப்படும். ஆனால் ஆரோக்கியமான பிற நொறுக்குத்தீனிகளுக்கு பதிலாக சாக்லெட்களையே உங்கள் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்றால், அதனை நிறுத்த வேண்டிய நேரம் இது. சாக்லெட்டினால் உண்டாகும் பக்க விளைவுகளை பற்றிய ஆய்வுகளை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், குழந்தைகளுக்கு எவ்வளவு சாக்லெட் கொடுக்கலாம் என்பதில் தெளிவு ஏற்படும்.

உங்கள் குழந்தையின் உணவு பழக்கம் சமநிலையோடு இருக்கையில், அவர்களுக்கு மிதமான அளவில் சாக்லெட் கொடுக்கலாம் என்று தான் பல ஆய்வுகள் பரிந்துரைக்கிறது. சாக்லெட்டை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால், அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பிரச்சனைகளை கூட உண்டாக்கி விடும். சரி, சாக்லெட் உண்ணுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் முக்கியமான உடல்நல தாக்கங்களை பற்றி பார்க்கலாமா?

குழந்தைகளின் உடல் பருமன் என்பது உலகளாவிய அளவில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகும். சாக்லெட் உண்ணுவதால் ஏற்படும் தீமைகளின் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறது உடல் பருமன். இதன் காரணமாக இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இந்த காலத்தில் டப்பியில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் சாக்லெட்களை குழந்தைகள் அதிகமாக உண்ணுகிறார்கள். அதனால் இந்த நோய் பெரியவர்கள் மட்டும் என்ற பாகுபாடில்லாமல் குழந்தைகளையும் தாக்கும். அளவுக்கு அதிகமான சாக்லெட்டை தொடர்ச்சியாக நீண்ட நாட்களுக்கு உட்கொள்ளும் போது, உடலில் உள்ள இன்சுலின் உணர்திறன் பாதிப்படையும். இதனால் டைப் 2 சர்க்கரை நோய் உண்டாகும்.

சீரான முறையில், உங்கள் குழந்தை தொடர்ச்சியாக சாக்லெட்களை உட்கொண்டால், அவர்கள் அதற்கு அடிமையாகி விடுவார்கள். இதனால் கையாளுவதற்கு கடிமான சூழ்நிலையை அது உருவாக்கி விடும். சாக்லெட்டை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்று. அதனால் உங்கள் குழந்தைகள் எவ்வளவு சாக்லெட் உண்ணுகிறார்கள் என்பதில் கவனம் தேவை.

30 மில்லி அளவிலான பாலில் 5 மி.கி. கஃப்பைன் உள்ளது. கஃப்பைனில் மிதமான சிறுநீர்ப்பெருக்கி குணம் அடங்கியுள்ளதால், உங்கள் குழந்தைக்கு அடிக்கடி சிறுநீர் வரலாம். குழந்தைகள் சாக்லெட் உண்ணுவதால் ஏற்படும் மற்றொரு பக்க விளைவு இது.

சந்தையில் விற்கப்படும் சாக்லெட்களில் பல மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அதில் உள்ள ஏதாவது ஒன்று, உங்கள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால், அது பல பிரச்சனைகளை உண்டாக்கும். பொதுவாக சாக்லெட்களில் பால், நட்ஸ் கலந்திருந்தால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படலாம்.

உங்கள் குழந்தை சாக்லெட் அல்லது வேறு ஏதாவது சர்க்கரை உணவுகளுக்கு அடிமையானால், அவர்களை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள ஆரோக்கியமான உணவுகளை உண்ண வைப்பது கஷ்டமாகி விடும். இது அவர்களின் வளர்ச்சிகள், முக்கியமாக, அறிவுத்திறன் வளர்ச்சியை பாதித்து விடும்.

சாக்லெட்டில் உள்ள கஃப்பைனின் அளவு குறைவாக இருந்தாலும், சாக்லெட்டை அதிகமாக உட்கொண்டால், அது உங்கள் குழந்தையின் தூக்கத்தில் தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

சாக்லெட்டினால் உங்கள் குழந்தையின் உடல்நலத்துக்கு ஏற்படும் தாக்கங்களை இப்போது புரிந்து கொண்டீர்களா? அதனால் உங்கள் குழந்தைகள் எவ்வளவு சாக்லெட் உண்ணுகிறார்கள் என்பதில் கவனம் வையுங்கள்.