Author Topic: என் காதலே  (Read 695 times)

Offline SunRisE

என் காதலே
« on: July 02, 2017, 12:23:35 PM »
எத்தனை துன்பங்கள்
எனை தாக்கிய பின்னும்
என் மனம் ஏனோ
துன்பம் கொள்வதில்லை
மீண்டும் வலிமை கொள்கிறது
எனது இளகிய மனம்
அது மன வலிமையின்
காரணமில்லை
உன் தோழமை கரங்களின்
வலிமை தானடி பெண்ணே

அடி மேல் அடி
எடுத்து வைக்கின்றேன்
சருக்கல்கள் மட்டும்
சாத்தியமாகியது
சருக்கல்கள்
சாதனையின் படிகள்
என வாய் மொழி
கூறாமல்
சருக்கல்கள் சுருக்கம்
அடையும் சூத்திரம்
கற்றுக் கொடுத்தாய்
நான் மீண்டு வர

வலிமையையும்
வாய்ப்புகளையும்
பற்றிக்கொண்டு
கரைசேரும்போது
கைகோர்த்து
நடந்த உணதன்பு
வாழ்க்கை முழுதும்
நீ வேண்டும் என
உன் கரம் பிடித்தால்
காய் கழுவினாயே

இத்தனை நாள்
தோன்றாத காதல்
என்னால் சாதிக்கும் போதா?
வலிகளின் விளிம்பில்
நீ துவண்ட பொது
என் மார்பில் உன்னை
சாய்த்து கொண்டு
உனக்காக நானிருக்கேன்
வாழ்க்கை முழுதும்
என உன் கண்களைத்
தேடினேன்
உனது விழிகள்
காதல் கொள்ளவில்லை
என் காதலும் தெரியவில்லை
நடப்பு கொண்டாடிய
உன் மன வலிமைக்கு
என் காதல்
தோற்றது நண்பா!
என்கிறாயே!

உனது வெற்றிக்கு
எனது தோல்வி
காணிக்கை
என்று சொல்லி
மீண்டும் என்னை
சறுக்கி விட்டு
செல்லாதே பெண்ணே
இளகிய மனம்
கரை சேராமல்
காகிதமாகும் அன்பே

நீ சொல்லி தந்த
வாழ்க்கை பாடம்
என் வலிமைக்கு
மட்டுமல்ல
நீயும் நானும்
சேர்ந்து வாழும்
வாழ்க்கைக்கும்

எனது பயணம்
உன்னை நோக்கி
தொடரும் பெண்ணே!

Offline ChuMMa

Re: என் காதலே
« Reply #1 on: July 03, 2017, 02:41:09 PM »
நீ சொல்லி தந்த
வாழ்க்கை பாடம்
என் வலிமைக்கு
மட்டுமல்ல
நீயும் நானும்
சேர்ந்து வாழும்
வாழ்க்கைக்கும்

பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோ

En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SunRisE

Re: என் காதலே
« Reply #2 on: July 05, 2017, 12:35:21 PM »
Nanri chumma sago

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: என் காதலே
« Reply #3 on: July 22, 2017, 08:53:24 AM »
arumai nanbaa