Author Topic: ~ சோள வடை ~  (Read 438 times)

Offline MysteRy

~ சோள வடை ~
« on: June 25, 2017, 08:58:49 PM »
சோள வடை



தேவையானவை:

வெள்ளை சோளம் - ஒரு கப், சோயா சங்ஸ் (மீல் மேக்கர்) - ஒரு கைப்பிடி அளவு, உருளைக்கிழங்கு - ஒன்று (பெரியது - வேகவைத்து மசித்துக்கொள்ளவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்தூள் (விருப்பப் பட்டால்) - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சோளத்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து வைக்கவும். மீல் மேக்கரை சுடுநீரில் 3-4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, வடிகட்டவும். பின் குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும். சோளம், மீல் மேக்கர் இரண்டையும் தனித்தனியே நீர்விடாமல் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த சோளம், மீல் மேக்கர், மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் (விருப்பப்பட்டால்) சேர்த்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.