Author Topic: ~ காளான் குருமா ~  (Read 450 times)

Offline MysteRy

~ காளான் குருமா ~
« on: June 25, 2017, 08:53:26 PM »
காளான் குருமா



தேவையானவை:

காளான் - 200 கிராம், பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2 (பெரியது), பச்சை மிளகாய் - 3 (கீறவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். காளானைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து பட்டை, லவங்கம், பச்சை மிளகாய் தாளிக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் காளான் சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடிபோட்டு வேகவிடவும். வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.