Author Topic: காதலின் சுவாசங்கள்  (Read 1008 times)

Offline Jawa

காதலின் சுவாசங்கள்
« on: February 21, 2012, 07:35:58 PM »
பூக்களுக்குள்ளும்
பறவைகளுக்குள்ளும்
பூமியில் தோன்றும்
புதுப் புது உயிர்களுக்குள்ளும்
பகிரப்படும் பண்பு நிறை காதல்
பேசும் மொழி புரியாததால்
மனிதர் மனம் அறியவில்லை...!
கண் மூடி மவுனத்தை
கவிஞன் மனம் கவிதையாக்கும்...   
காதல் அர்த்தம் அதற்குத் தெரியும்
காவியங்கள் படைத்து நிற்கும்....!   
பிரிந்து உருவாக்கும்
புழுக்களுக்குள்ளும்
புனித காதல் ஒளிந்திருக்கும்.....   
தன்னைத் தான் உணர்ந்து கொள்வதும்....   
தங்கமான காதல் தோழி...!

Offline Yousuf

Re: காதலின் சுவாசங்கள்
« Reply #1 on: February 21, 2012, 07:55:10 PM »
ஒவ்வொரு உயிருக்குள்ளும் காதல் உள்ளது!
காதல் இல்லாத உயிர் ஏதும் உண்டோ?
இப்புவியிலே...!

நல்ல கவிதை காதலை பற்றி ஜாவா!

தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்!

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: காதலின் சுவாசங்கள்
« Reply #2 on: February 21, 2012, 11:12:14 PM »
nala kavithai jawa

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: காதலின் சுவாசங்கள்
« Reply #3 on: February 22, 2012, 05:08:14 AM »
Nice one Jawa
rasikum padiya iruku

Offline Global Angel

Re: காதலின் சுவாசங்கள்
« Reply #4 on: February 23, 2012, 02:28:42 AM »
காதலை சொல்லும் நல்ல காதல் கவிதை ஜவா ..... நல்ல காதல் சொட்டும் இனிய கவி வரிகள்