உன்னை போன்ற பெண் ஒருத்தி
என்னுடன் இருந்தால்
சுட்டெரிக்கும் சூரியனும்
சுடராகும் என் வாழ்வில்
அந்தி மாலையும்
ஆனந்தம் கொள்ளும்
இரவின் நிலவும்
இனிமை சேர்க்கும்
துயரங்கள் துன்பப்பட்டு ஓடும்
உன் தூய அன்பிலே
இன்பங்கள் எனக்கு
முக்கணியும் தேனும்
கலந்தது போல் ஆகும்
உன் வாய்மொழி யாவும்
நான் கேட்கும்
இசை ஆகும்
கவி காதலன் ஆன நான்
கவி பேரரசு ஆகலாம்
உன்னால்
என் இசை நீயடி
என் அவஸ்தைகளும் நீயடி
என் மொழி நீயடி
உன் நிழல் நாணடி
எங்கு சென்றாய் நீ
எனை ஏங்க விட்டு
தொலைந்து போனாய்
என்னை துயரில் விட்டு
மறைந்து போனாய்
நான் இந்த மண்ணின்
ஆசைகள் துறந்திட