Author Topic: நாம் தேச துரோகி என்று உரக்கச் சொல்லுவோம்!  (Read 1401 times)

Offline Yousuf

கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்க்கும் அனைவரும் தேச துரோகிகள் என்று மத்திய அரசு கொக்கரிக்கிறது.

கூடங்குளம் அப்பாவி மீனவ மக்கள் மீது தேச துரோக வழக்கு உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேச தந்தை காந்தியடிகளை கொன்ற காவி கும்பல் தேச பக்தர்களாம். சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளையர்களுக்கு காட்டி கொடுத்த ஆர்.எஸ்.எஸ். வர்ணாசிரம கூட்டம் தேச பக்தர்களாம்.

ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ்காரர்கள் தேசபக்தர்களாம். தமிழக மீனவர்களை சிங்கள பயங்கரவாதிகள் சுட்டு கொல்லும்போது வேடிக்கைபார்த்த மன்மோகனும், சோனியாவும் தேசபத்தர்களாம்.

மீனவ குடும்பத்தில் பிறந்து மீனவர்கள் கொல்லப்படும் போது அதை பற்றி வாய் திறக்காத அரசு பயங்கரவாதம் என்கிற தேளின் கொடுக்கு அப்துல்காலாம் தேசபக்தராம். நாட்டு நலனில் அக்கறை இல்லாத கார்பரேட் முதலாளிகளின் கைகூலிகள் எல்லாம் தேசபதர்கலாம். நாட்டு நலனில் அக்கறையுள்ள அப்பாவி கிராம மக்கள் எல்லாம் தேச துரோகிகளாம்.

இவர்கள் இலக்கணப்படி இதுதான் தேசதுரோகம் என்றால் நாம் ஒவ்வொருவரும்  உரக்கச் சொல்லுவோம் நாம் எல்லாம் தேசதுரோகிகள் என்று. கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்ப்பது மனித நேயம் கொண்ட ஒவ்வொரு மனிதனின் கடமை. கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கும் அனைவரும்  இருதயம் இல்லாத இந்தியர்கள். இருதயம் இல்லாத தேசபக்தி இந்தியர்களாக இருப்பதை விட நாம் இருதயம் உள்ள மனிதனாக இருப்போம்.