பிறக்கவும் பிறந்த பின் வாழவும்
வாழ்ந்த நாளில் சாகாமல் இருக்கவும் ,
நீ தேவை
இறந்தபின்னும் உன் தேவை இருக்கத்தான்
செய்கிறது
ஜாதி, மதம், ஆண் ,பெண் பேதம்
உன்னில் நான் கண்டதில்லை
சுத்தம் உனக்கு ஒரு பொருட்டல்ல
கோவிலில் கடவுளின் மடியிலும்
நீ இருப்பாய்
குப்பை அள்ளுபவரின் கையிலும் நீ
தவழ்வாய்
வேறுபாடு உன்னில் நான்
கண்டதில்லை
மனிதனின் வெற்றியும் தோல்வியும்
உன்னை வைத்தே
தீர்மானிக்கிறார்கள்
உன்னை போதும் என்று சொல்பவர்
தேடினாலும் இம்மண்ணில் காண்பது
அரிது
உன்னால் உறவை தொலைத்தோர் பலர்
உன்னால் உயிரை தொலைத்தவர் பலர்
இருந்தும் நீ உடன் இருந்தால் மகிழ்வர்
மூன்றேழுத்தை தேடி மூச்சிரைக்க
ஓடுகிறேன் எங்கிருக்கிறாய் நீ
பணமே!