Author Topic: எல்லாம் நீயே  (Read 799 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
எல்லாம் நீயே
« on: June 11, 2017, 11:11:47 PM »
என் சகாரா பாலைவனக்களில்
பனி மழை
என் தொலைதூர பயணங்களின்
வழித்துணை

என் கருமை இரவுகளின்
விடிவெள்ளி
என் தனிமைக் கனவுகளின்
வழிகாட்டி
 
அடிக்கடி நான் பேசும் தத்துவங்களின்
ஆசான்
எப்போதாவது என் மௌனங்களின்
காரணம்

மறந்து போனதை மறக்காத
நாட்குறிப்பு
மனம் திறந்து நான் எழுதும்
டைரி
 
எனக்குப் பிடித்த பாடல்களின்
இசை
எழுதித் தீர்க்கும் கவிதைகளின்
மொழி

என்றுமே நான் தேடும்
நட்பு
எப்போதாவது எனக்கு வரும்
கோபம்
 
என்றும் என்னை நினைக்கும்
மனம்
என்றும் என்னுள் நிலைக்கும்
உயிர்

எப்போதோ நான் செய்த
தவம்
எப்போதும் நான் தீர்க்க முடியாத
கடன்

எல்லாம் நீயே
எந்தன் தாயே

Offline JeSiNa

Re: எல்லாம் நீயே
« Reply #1 on: June 12, 2017, 01:12:19 AM »
Arumaiyana kavithai Thozhi... ithe Maari Neraiya Kavirhai Eluntha Enudaya Vazhthugal... :-*

Re: எல்லாம் நீயே
« Reply #2 on: June 12, 2017, 09:35:24 AM »
அருமை தோழி ஒலியெழுத்து அருமை மொழிநடை கவனம் கொள்க டைரி போன்ற ஆங்கிலம் வேண்டாம் அழகு கூடும்
« Last Edit: June 12, 2017, 09:18:27 PM by சக்திராகவா »

Offline SunRisE

Re: எல்லாம் நீயே
« Reply #3 on: June 12, 2017, 11:08:42 AM »
Arumai thozhi niya

Offline ChuMMa

Re: எல்லாம் நீயே
« Reply #4 on: June 12, 2017, 11:32:49 AM »
என்றும் என்னை நினைக்கும்
மனம்
என்றும் என்னுள் நிலைக்கும்
உயிர்

வாழ்த்துக்கள் சகோ அருமையான வரிகள்
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: எல்லாம் நீயே
« Reply #5 on: June 12, 2017, 05:50:17 PM »
nanri nanbarkale (chumma,sakthi,sunrise,jesina)

kavanithukolkiren sakthi :)

Offline SweeTie

Re: எல்லாம் நீயே
« Reply #6 on: June 13, 2017, 06:35:50 PM »
நியா   அழகான வரிகள்.   சிறப்பான கவிதை.   திருஷ்டி  போல  ங்  என்ற எழுத்து  க்
ஆகி  இருக்கிறது பாலைவனங்களில்.  வாழ்த்துக்கள் 

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: எல்லாம் நீயே
« Reply #7 on: June 13, 2017, 08:33:57 PM »
sweetie

thavarai thiruthi kolkiren
nari