Author Topic: ஈறு பேன் தொல்லை இல்லா கூந்தல் வேண்டுமா?  (Read 1340 times)

Offline RemO

கூந்தலின் அழகைக் கெடுப்பதில் பொடுகு மற்றும் பேன்களுக்கு பெரும்பங்கு உண்டு. பேன் ஒருவகையான புற ஒட்டுண்ணி. நமது ரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்ளும் இந்த பேன்கள் மிகவேகமாக இனப்பெருக்கம் செய்து கூந்தலியே முட்டையிடுகின்றன. இதனால் அரிப்பும், கூந்தலுக்கு அழகின்மையும் ஏற்படுகின்றன. பேன்களை அழிக்க இயற்கை முறையிலேயே சில மருந்துகளை உள்ளன.

வேப்பிலை வைத்தியம்

வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும்.

பேன் தொல்லைக்கு வேப்பிலையை அரைத்து தலையில் தடவிவிட்டு சிரிது நேரம் கழித்து அலசி விடுங்கள். பேன் ஒழிந்து விடும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இப்படி செய்யலாம். தூங்கும் போது தலையனை மீது வேப்பிலை மற்றும் துளசி இலைகள் பரப்பி அதன் மேல் ஒரு துணி போட்டு தூங்க வைக்கலாம். இதனால் பேன் தொல்லைகள் ஒழியும்.

வெந்தையப் பொடி

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு மையாக அரைத்து அதனுடன் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அதன் பின்பு குளித்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கும்.

குப்பைமேனிச் சாறு

சீதாப்பழத்தின் கொட்டைகளை இரண்டு நாட்கள் நன்கு சூரிய வெப்பத்தில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து வைத்து இரவில் தலைக்குத் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் பேன்கள் தொல்லை ஒழியும்.

குப்பை மேனிக் கீரையானது பேன் தொல்லையை போக்குவதில் முக்கியபங்கு வகிக்கிறது. குப்பை மேனி இலையை அரைத்து சாறு எடுத்து தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும்.

Offline Yousuf

ஈறு, பேன் என்றாலே மிகப்பெரிய தொல்லைதான்!

இதில் இருந்து தப்பிக்க நல்லதொரு தகவல் ரெமோ!

நன்றி!

Offline RemO