வீதிக்கு வந்த விவசாயிக்கு
கை கொடுக்க யோசித்தால்
வீட்டிற்கு அரிசியும் முட்டையும்
நெகிழியில் வந்து
நெருப்பினில் வெந்து
தட்டில் தானே விழும்
மண்ணும் மரமும்
நீரும் ஏரும் இன்றியமையாதென
இன்னமும் புரியவில்லையா??
விவசாயி தான் தெய்வம்
விளைச்சல் தான் வரம்
எப்படியோ போங்கள்
இறக்குமதி இந்திய வியாதி
விவசாய அலட்சியம்
வியாதியே நிச்சயம்
சக்திராகவா