🔥
பொன்னிற போர்வையிலே
பொலிவோடு பூ மலர
பொத்திவைக்க முடியவில்லை
பொறியிதழ்கள் புகைவதனால்
நீயும் ஆச்சர்யமே நெடுந்தீயே
தீபமாய் திரியோடும் காதல் செய்கிறாய்
கோபமாய் பூமியோடோ!!!
எரிமலையென! ஊடல் செய்கிறாய்.
மனிதனால் அசுத்தமாகாத
மிச்சமீதியில் நீ! தீ!!!
காற்றுடன் கையசைத்தும்
கற்போடு வாழ்வது நீ!
அமிலத்தில் அதீத காதலோ
ஆடுகிறாய் நாட்டியம்
தண்ணீரை தவிரத்திடும் எதிரியோ
தற்கொலைக்கே முயல்கிறாய்
கல்லிலே பிறந்த உண்ணை
கல்லறை வரை கைப்பற்றிக்கொள்வேன்
காதலியைப்போல....
சக்திராகவா