Author Topic: அடையாளங்கள்  (Read 557 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
அடையாளங்கள்
« on: June 02, 2017, 11:46:26 PM »
அடையாளங்கள்

நீ நீயாய்
சுயமாயிருப்பதிலும்
என்னை நானாய்
ஏற்பதில்
தோற்றுப் போயிருக்கிறாய்.

காரணம்
நீ
நிஜங்களிலிருந்து பிறந்த
மாயைகளுள்  மூழ்கியும்
போலிகளுள் புதையுண்டும்
போயிருக்கிறாய்
உணர்வுகளை விடவும்
அதிகமாய்
உருவங்களை நேசிக்கிறாய்

வேஷங்களுள் இருந்து
வெளிப்படும் வரையில்
நாம் நாமாயிருப்பது  என்பது
உனக்கு வேடிக்கையாயிருக்கலாம்
ஆனால் என்றோ ஒருநாள்
போலி உருத்தொலைந்து
வேஷங்கள் கலைந்து போக
நீ நீயாவே  மட்டும்

மீதப்படுவாய்
அப்போதாவது
என்னை நானாக உணர்ந்துபார் 
 
« Last Edit: June 03, 2017, 12:42:21 AM by NiYa »

Offline SwarNa

Re: அடையாளங்கள்
« Reply #1 on: June 06, 2017, 03:58:16 PM »
என்னை நானாய்
ஏற்பதில்
தோற்றுப் போயிருக்கிறாய்.


arumai niya .menmelum ungal kavithaikalai vaasika aavaludan kaathukondirukiren :)
vaazthukal

Offline ChuMMa

Re: அடையாளங்கள்
« Reply #2 on: June 06, 2017, 05:56:58 PM »
நீ நீயாய்
சுயமாயிருப்பதிலும்
என்னை நானாய்
ஏற்பதில்
தோற்றுப் போயிருக்கிறாய்.

சகோ

நம் கருத்தை மற்றவரின் மனதில் திணிப்பதில் தானே
நம் அன்றாட வாழ்க்கை சுற்றுகிறது

புரிந்தும் புரியாமல் சுற்றி கொண்டிருக்கிறோம்

சுயம் அறியும் நாள் சுற்றாது இருப்போம் நாம்

வாழ்த்துக்கள்
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline AYaNa

Re: அடையாளங்கள்
« Reply #3 on: June 06, 2017, 06:46:25 PM »
 >:(
உணர்வுகளை விடவும்
அதிகமாய்
உருவங்களை நேசிக்கிறாய்

உண்மையான வரிகள்
 :-[ :-[ :-[