Author Topic: அன்பின் அகராதியே தியாகத்தின் ஊற்றே வாழ்வின் வழிகாட்டியே அன்னையே உமக்கு...  (Read 650 times)

Offline JeSiNa


*அம்மா! அம்மா!*

*✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :*
*கடைசி உருண்டையில்தான் எல்லா*
*சத்தும் இருக்கும்,*
*இத மட்டும்* *வாங்கிக்கோடா*
*கண்ணா!*

*✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான்*.

*✏ தன் 'அம்மா' தனக்கு* *என்னவெல்லாம்*
*செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.*
*அவன் அதை உணரும்போது*, *அவள் உயிரோடு இருப்பதில்லை.*

*✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.*
*
*✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.*

*✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.*

*✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!*

*✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.*

*✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'*

*✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்*

*✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்*

*✒ தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!*

*✏ அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக்* *கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித்* *தந்த அந்த (தொட்டில்)* *வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.*
 *நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு*

*✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?*

*✒ 'அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.*

*✏ ஆயிரம் கைகள் என்* *கண்ணீரைத் துடைத்துப்*
*போனாலும், ஆறாத* *துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.*

*✒ கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.*

*✏ நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!*

*✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!*

*✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை*
*என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை*.

*✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.*

*✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை*.

*✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!*

*✏ 'அம்மா...!*' *அன்று நம்* *தொப்புள்கொடியை* *அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின்* *தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு* *விழா ரிப்பன்!*   
[/glow]
       

          I Love amma.. :-*
« Last Edit: May 15, 2017, 01:08:43 PM by JeSiNa »

Offline SunRisE

சகோதரி

ஆழமாக உங்கள் மனதில் உள்ளதை
அழகாக சொல்லியுள்ளீர்கள்
எத்தனை கவிதை பாடினாலும்
ஈடாகாது அம்மாவின் அற்புதங்களை
சொல்லி விட

தன் 'அம்மா' தனக்கு* *என்னவெல்லாம்*
*செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.*
*அவன் அதை உணரும்போது*, *அவள் உயிரோடு இருப்பதில்லை.*

இந்த வரிகள் என்னை பாதித்த வரிகள்
உண்மை

நன்றி சகோதரி

Offline JeSiNa

En kavithaiku neram othiki atharku ungal manathil thonriyathai velipaduthiyatharuku mikka nantri :) SunRisE
[/glow]

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Jesi chllm :-* luv it chllm :D

தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!*

he he ithu daily enakum nadakura oru vishayam ;D cho chwt chllm ;D thodarnthu eluthu chllm  :-*

Offline JeSiNa


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் தங்கச்சி

உன் ஊக்கம்
அம்மா எனும் அருளால்
நிதானமாக வெளிப்பட்டுள்ளது

உன் கவிப்பயணத்தில்
இது தாவிப்பாய்ந்த
பெரும் தொலைவு


பயணம் தொடர்கையில்
சீரோடு சிறப்பும் கிட்டுமென
நம்புகின்றேன் வாழ்த்துகின்றேன்


வாழ்க வளமுடம்
நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline JeSiNa