சிறகு முளைக்கா குஞ்சுகள் ....
தாயின் சிறகில் தஞ்சம் கொண்டு வளர்வது போல் ...
தாய் தந்தை அரவணைப்பில் வளமாக வளர்ந்தேன் ...
அன்னை ,தந்தை ,தங்கை,தம்பி என வளர்ந்தேன் ...
எனக்கான சொந்தம் என இருந்தேன் ...
சுகமாக வாழ்ந்தேன் ....
தேவைகள் இல்லை எனக்கு ..
வேதனை ஏதும் அறியவும் இல்லை எனக்கு ...
கரும்பாய் இனித்தது ....
இன்று ...
கவலைகள் வந்து சூழ்ந்தது ...
கடமைகள் கழுத்தை நெரித்தது .
நீண்ட பெருமூச்சில் அந்த நினைவுகள் ....
மனக்கூட்டில் அந்த உறவுகள் ...
தனிமையில் இருக்கும் மனசு ...
திரும்ப கேட்கும் ...
அந்த அழகிய நாட்களை ...!!!.