வேதங்கள் போதிக்க
விண்ணவர் தேவையில்லை
மேதைகளும் தேவையில்லை
ஜாதகங்கள் எடுத்துரைக்க
அறிவுரை வழங்கவும்
ஆக்கங்கள் புரியவும்
பிதாமகனும் தேவையில்லை
ஆறறிவுதான் இருந்தால்
சிற்றெறும்பு போதும்
சிறு துளைகள் தோன்றிவிடும்
யானைகளும் அடி சறுக்கும்
காலத்தின் கைப்பிடியில்
பகுப்பதும் பிரிப்பதும்
கனப்பதும் சினப்பதும்
தனிப்பதும் திகைப்பதும்
தன்மானத்துக்கு இல்லை என்றும்
இமயத்தின் உயரம்
ஆழ்கடலின் ஆழம்
கற்பகதருவின் வாசனை
கண்டோருமில்லை
வென்றோருமில்லை.