Author Topic: என் கனவுக்காதலி  (Read 533 times)

Offline SunRisE

என் கனவுக்காதலி
« on: May 10, 2017, 06:20:32 AM »
உன்னை மட்டும்
என் நெஞ்சில் வைத்தேன்
உறவுகள் பல
கோடி வைத்தேன்

உன் சுருள் முடி கண்டு
மெய் சிலிர்த்தேன்
உன் இதழ்கள் கண்டு
பூக்களின் மேன்மையை அறிந்தேன்

முழு நிலவும் வெட்கப்படக்
கண்டேன் உன் முகம் பார்த்து
விண்ணொளியும் வெட்கப்படக்
கண்டேன் உன் பற்களின்
வெண்மை கண்டு

மழையில் நீராடும்
உன் முகத்தில்
ஒரு துளி மட்டும்
உன் கூர்மை
மூக்கின் மீது
தவழ்ந்து வர கண்டேன்

உன் சிரிப்பொலியை கேட்டு
வீணையின் நாளங்கள்
இசை பயில கண்டேன்
உன் புன்னகையை கண்ட
அன்னப்பறவை
மெய்மறந்து பாலை விட்டுவிட்டு
தண்ணீர் அருந்த கண்டேன்

எல்லோரா ஓவியங்கள்
இரண்டு கச்சை கட்டி
அந்த கச்சைகள்
இச்சை கொள்ள கண்டேன்

மகரந்த பூக்களின் இமைகளில்
உன் மான் விழிகளின்
காந்தம் பட்டு
என் இதயத்தின் ஓசை
இடம் மாற கண்டேன்

பெண்களின் நளினமாம்
மெல்லிடை
உன் இடை கண்ட பின்பு
தான் அறிந்தேன்
ஒட்டியாணம் தேவை இல்லை
உன் போன்ற இடைக்கு
ஒற்றை மச்சம்
போதும் என்பேன்

காலணிகலன் காற்றில் தவழ
நடை பயிலும்
உன் பாதங்களை
நழுவி விட்டோமோ
என எண்ணி ஏங்கும்
காலணிகலன்களை கண்டேன்

உன்னை படைத்த பிரம்மனிடம்
தோல்வியை ஒத்துக்கொண்ட
கஜுராகோ சிற்பியை கண்டேன்

இரவுக்காதலியே
தினமும் வருகின்றாய்
நான் துயில்கொள்ளும் நேரம்
மறைந்து போகின்றாய்
என் துயில் களைந்து
உனக்காகவே உறங்கப்போகின்றேன்
அந்தி சாய்ந்ததும்

நித்தம் வரும் நீ
என் நித்திரை கலைந்தாலும்
பரவாயில்லை
தினமும் வந்துவிடு
என் கனவுக்காதலியே

உன் அன்புடன் பிரியன்


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: என் கனவுக்காதலி
« Reply #1 on: May 10, 2017, 11:48:48 AM »
வணக்கம் சகோதரா

கவிதை பேரழகு
வர்ணிக்க காலம்
இப்போ போதவில்லை


வாழ்த்த நான் மீண்டும்
வருகின்றேன் விரைவாய்


நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SunRisE

Re: என் கனவுக்காதலி
« Reply #2 on: May 10, 2017, 12:45:11 PM »
உங்கள் உளம் கனிந்த பாராட்டுக்கு நன்றி.
பணிகளை இனிதே முடித்து வாருங்கள்


Offline MyNa

Re: என் கனவுக்காதலி
« Reply #3 on: May 10, 2017, 05:55:57 PM »
Vanakam piriyan..

Kavithaiyil rasanaigal
pala kanden..

Varigalil varnipin
velipaadinai kanden..

kavithaiyinai padithapin
antha perazhagai enni
viyanthum ponen..


arumaiyaana kavithai piriyan..
azhaguke azhagu serthutinga kavithai vaayilaaga..
vazhthukal  :)


Offline SweeTie

Re: என் கனவுக்காதலி
« Reply #4 on: May 10, 2017, 07:06:40 PM »
ஆஹா!  ஆஹா!    ஆஹா!.....   எனக்கு புல்லரிச்சுப்போச்சு.
அந்த பேரழகிக்கு   வாழ்த்துக்கள். 

Offline SunRisE

Re: என் கனவுக்காதலி
« Reply #5 on: May 10, 2017, 10:24:57 PM »
வணக்கம் மைனா மற்றும் அன்பு தோழி ஸ்வீட்டி
உங்களின் பாராட்டு மற்றும் உங்கள் ரசிப்பின் ஆழம் இன்னும் என் எழுத்தின் திறனை மேம்படுத்தும் ஐயமில்லை
நன்றி  உங்கள் இருவருக்கும்

பிரியன்

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: என் கனவுக்காதலி
« Reply #6 on: May 11, 2017, 08:07:55 PM »
வணக்கம் சகோதரா

அழகு எழில் சுந்தரம்
உங்கள் கவிதை


கவிதை அற்புதம் அபாரம்
படிக்கையில் எனக்கு ஆனந்தம்


சொல்லுக்கு சொல் அர்த்தம்
வரிக்கு வரி சந்தம்
பந்திக்கு பந்தி பேரழகு

இந்த கவிதைக்கு
காதல் பல
விண்ணப்பம் செய்யும்


அது சரி
எல்லாரும் அக்கா தங்கை
என்றால் எங்கே இருந்து தான் வரும்

நீங்கள் மிக பெரும் கவிஞன் பிரியன் சகோதரா

வாழ்த்துகின்றேன்
கவியும் கவிஞரும் தமிழும் வாழ்க வாழியவே


உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: என் கனவுக்காதலி
« Reply #7 on: May 11, 2017, 09:42:40 PM »
Sun bro :D pramatham :) kanavu kanniya illa enga anniya nu doubta iruku bro ;D ungaludaya rasanaigaluku kodi vazhthukkal bro

Offline SunRisE

Re: என் கனவுக்காதலி
« Reply #8 on: May 12, 2017, 09:10:35 AM »
சகோதரா,
உங்கள் பாராட்டுக்கு நன்றி
உங்கள் பாராட்டுக்கள் என்னை
ஒரு நிமிடம் யோசிக்க வைத்தது இனிமேல் காதல்
கவிதைகள் எழுத வேண்டாமென்று

இந்த கவிதைக்கு
காதல் பல
விண்ணப்பம் செய்யும்

விண்ணப்பங்கள் வேண்டாம் எனக்கு
விமர்சனம் மட்டும் போதும்

நன்றி சகோதரா

Offline SunRisE

Re: என் கனவுக்காதலி
« Reply #9 on: May 12, 2017, 09:14:53 AM »
விபூர்த்தி சகோதரி,
நன்றி உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு
இது கனவு கவிதைதான் நம்புங்க
சரோதரி.

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: என் கனவுக்காதலி
« Reply #10 on: May 12, 2017, 05:31:56 PM »
வணக்கம் சகோதரா

கவிதையின் மேன்மைக்காய்
சொல்லிய ஒரு அடைமொழி

பயப்பிடாமல் எழுதுங்கள்
;D ;D ;D
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....