நாவிலே விழத்தகும் வரம் மழை
கைகூட தீண்டாமல்
நாவிலே விழத்தகும் வரம் மழை
கடவுள் தந்த இயற்கை வரங்களில்
கலப்படம் இன்றி பெறத் தகுந்தவள் நீ
பிள்ளையாய் வாழ்ந்த நாட்களில்
சீற்றம் இல்லாத உன்னை கண்டு
மகிழ்ந்தது உண்டு மழையே
சீராய் பெய்வாய்
பருவத்தே பெய்வாய்
பலனென பெய்வாய்
கூரையில் விழுந்து
தாள்வார பீலியில் இறங்கி
ஓடைபோல் ஓடி ஓர்
மூலையில் ஒழுகுவாய்
சேமிப்பு பேழையில்
இப்போது நீ இல்லாமையும்
மரணம்
உன் வரவும் கொடிய மரணம்
என் செய்வோம் நாம்
சிறுவயதில் பார்த்து மகிழ்ந்தேன்
பீலி வைக்காத தாள்வார தடத்தில்
சுயமாய் நீங்கள் ஓடி
துளியாய் ஒழுகிய ஆதாரங்கள்
நிரலாய் சிறு சிறு குழியாய்
இருக்கும் நிலத்தில்
துளியாய் ஒழுகையில் கையில் ஏந்தி
அருந்தாமலும் இல்லை
கலப்படம் இல்லாமல்
காற்றைப்போல்
எங்கேயும் ஒட்டி உரசாமல்
வானமிருந்து வரும் உன்னை
என் கையும் தீண்டாமல்
என் நாவிலே ஏந்தி அருந்தி
சுவைத்து மகிழும் இன்பம்
உன்னிடம் அன்றி எங்கே பெறுவோம்
உலகில் கலப்படம் இல்லா ஒருத்தி நீயே மழையே
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே