Author Topic: நீர் வளம் இறைவன் அருளும் கொடை  (Read 551 times)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
நீர் வளம் இறைவன் அருளும் கொடை


மாணவர் விடுதியில் ஓர் நாள்
உணவு வேளை அனைவரும்
உண்கையில்
புரையேறி விக்கியதில்
நிலை குலைந்தாள் ஒருத்தி


ஓடினாள் ஒரு மாணவி நீர் மெள்ள
நீர்க் குழாய்களிலும் நீர் வரவில்லை
தேக்கிய குவளைகளும் தீர்ந்து போயின


அடியில் மண்டியென ஏதோ கொஞ்சம்
அதையாகிலும் சிந்தாமல்
அவதானமாய்
எடுத்து வந்தாள் விரைவாய்


விக்கி தவித்தவள்
சாதியெனும் மூடநம்பிக்கை
வெறிகொண்டவள்


சீ போ உன்கையால் மெண்ட நீர்
நான் பருகவோவென
உதறி எறிந்தாள்


விக்கல் சிக்கலானது
வேறுசிலர் ஓடினர் நீர் மெள்ள
நீர் இல்லை பரிதாபம்


மலக்குழியில் தேங்கிய நீர்தான் உண்டு
பருகி உயிர் பிழைத்துக்கொள் - இல்லையேல்
சாதி வெறிகொண்டு செத்திடு
முடிவு உன்கையில்


மாணவர் விடுதியில் ஓர் நாள்
தக்க வேளையில் நீ இல்லை 
நிலை கண்டாயா


பணம் நம்மிடம் இருக்கலாம்
பயன்படுத்தும் நீருக்கு நாம்
கட்டணமும் செலுத்தலாம்
- ஆனால்

நீரில்லா காலமதில்
நம் பணம் கொண்டு
நீரை உண்டாக்கிட முடியாது

ஏனென்றால்
நீர் வளம் இறைவன் அருளும் கொடை


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
« Last Edit: May 09, 2017, 03:25:33 PM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ChuMMa

சகோ

அருமையான சிந்தனை

நீர் இன்றி மடிந்தோர் பலர்

மனிதா
நீர் காப்போம் நிலம் காப்போம்
உடன் உயிரும் காக்க படுமே
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline MyNa

Vanakam sarithan..
kavithai ya padichitu athil ulla karutha enni kavalai paduratha illai kova padurathunu theriyala sarithan.
Manithaneyam kooda silavelaigal la mathika padurathu ilai.. :(


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் சகோதரா

வாழ்த்துக்கும்
கருத்துக்கும்
நன்றி சும்மா சகோ
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் தோழி

கோவம் கவலை
இரண்டுமே வரும்
இல்லையென்றால்
ஏதோ தவறு


உண்மையான சம்பவம்
கவிதையில் முடிந்ததை
சொன்னேன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மைனா 
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SunRisE

சகோதரா,
நீரின் ஆற்றல
நிலம் உள்ளவரை
ஒருபோதும்
ஓய்ந்து போகாது
அதன் ஓட்டம்

இன்று எட்ட கனி
என்ற போதும்
இயற்கையின்
இறைவனின்
நன்கொடை
நம்மை விட்டு
போகாது

இறைவன் இயற்கையின்படைப்பு
அழிவு கிடையாது