நீரின் அருமை நான் உணர்ந்தேன்
குளியலறையில் நீராடையில்
குழாய் நீரை பாயவிட்டு
பாடிப் பாடி தேகம் நனைவேன்
குளியலின் நடுநிலை
சவர்க்காரம்
உடல் முழுதும் நுரையாய்
உண்டானது மின்வெட்டு
நின்றுபோனது குழாய் நீர்
வீட்டிலே யாரும் இல்லை
மாமன் மகளையன்றி
வெளியே செல்லவும் இயலாது
அவளை அழைக்கவும் முடியாது
சவர்க்காரத்தின் நுரைப்படிவங்கள்
இயல்பான எனதழகை
கெடுத்துச் சென்றது
நீரின்றி காய்ந்த போது
உண்டான சாபம்
நீரின் பெருமை சொல்லி சென்றது
முன்னர் போல் இல்லை இன்றெல்லாம்
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு
முன்னரெல்லாம் நான் முழுக
ஒரு மணி பொழுதுகள்
நீர்க்குழாய்கள் திறந்தே இருக்கும்
சுமார்
நான்கு நூறு குவளைநீர் வீணாகும்
காலத்தையும் வீணடிப்பேன்
நீரையும் விரையம் செய்வேன்
ஒரு நாள் கற்றபாடம்
நீரின் அருமை
உணர்ந்து கொண்டேன்
அரைமணி பொழுதுகள்
நூறு குவளை நீர் போதுமென பழகி
நிறைவும் கொண்டேன்
நீரது விரையமாகையில்
குருதியது ஓடுவதாய் உணர்க
குருதியே உயிர்
நான் உணர்ந்துவிட்டேன்
நீங்கள்?
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே