Author Topic: ~ வேப்பம்பூ துவையல் ! ~  (Read 541 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226271
  • Total likes: 28733
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ வேப்பம்பூ துவையல் ! ~
« on: May 08, 2017, 11:07:32 AM »
வேப்பம்பூ துவையல் !



தேவையானவை:

வேப்பம்பூ - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2 (அ) 3, வெல்லம் - ஒரு சிறு கட்டி, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் வேப்பம்பூவையும் வறுத்து எடுக்கவும். வறுத்த பொருள்களை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு... வேப்பம்பூ, புளி, உப்பு, வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

இந்தத் துவையல் பித்தக் கோளாறுகளைப் போக்க உதவும்.

வேம்பம்பூவை நெய்யில் வதக்கிச் சேர்ப்பதால் பூவில் உள்ள கசப்புத் தன்மை சற்று குறையும். அதனால் நெல்லிக்காய் அளவு புளியைச் சேர்த்துக் கொண்டால் போதும்.
« Last Edit: May 08, 2017, 11:09:05 AM by MysteRy »