Author Topic: என்னைத் தெரியுமா  (Read 471 times)

Offline thamilan

என்னைத் தெரியுமா
« on: May 07, 2017, 11:54:00 AM »
பத்து மாதமேனும்
என் பரிசுத்த நிம்மதிக்கு
சொர்க அறை தந்த - என்
தாயிடம் கேட்க வேண்டும்
என்னைத் தெரியுமா என்று .......

வாழ்வெனும் ஓட்டை ஓடத்தின்
வழிபாதைகளையும்
அக்கறையாய் செப்பனிட்ட - என்
தந்தையை கேட்க வேண்டும்
என்னைத் தெரியுமா என்று ......

என் மோக அனல் மூச்சில்
முழு சுவாசம் தேடி
என்னைப் பிரித்தெடுக்கும்
பெரு முயற்சியில்
சரிபாதி பங்கெடுக்கும்
இல்லாளைக் கேட்க வேண்டும்
என்னைத் தெரியுமா என்று .......

கூத்தாடும் குரங்கு மனதை
தொட்டு அதட்டியும்
நில்லென நிலைப்படுத்தும்
நண்பர்களைக் கேட்க வேண்டும்
என்னை தெரியுமா என்று ..........

ஏனெனில்
என்னை  எனக்கே தெரியாமல்
எண்ணற்ற ராத்திரிகள்
ஞான விளக்கேற்றி
விடை தேடித் கொண்டிருக்கிறேன் ........

இருந்தும்
இன்னமும் என்னது
பனிமூடிய பேருண்மை தான்

Offline SunRisE

Re: என்னைத் தெரியுமா
« Reply #1 on: May 07, 2017, 01:15:19 PM »
ஏனெனில்
என்னை  எனக்கே தெரியாமல்
எண்ணற்ற ராத்திரிகள்
ஞான விளக்கேற்றி
விடை தேடித் கொண்டிருக்கிறேன் ........

இது எல்லோருக்கும் உள்ள தேடும் விடயம் எதார்த்தமான உண்மை அருமை தமிழன்  சகோதரரே