Author Topic: ~ தேன் மருத்துவம்! ~  (Read 353 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226344
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ தேன் மருத்துவம்! ~
« on: May 05, 2017, 07:32:57 PM »
தேன் மருத்துவம்!



* தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

* தேனும், வெந்நீரும் கலந்து அருந்திவர பருத்த உடல் மெலியும். ஊளைச்சதை குறையும். உடல் உறுதி அடையும்.

* அடிக்கடி சளி பிடித்தால் இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன் தேன்கலந்து தினமும் பருகிவர நல்ல பலன் தெரியும்.

* உடல் மெலிந்தவர்கள் தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிட்டுவர உடல்வாகு சீராகும்.

* தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டுவர பார்வை பிரகாசமடையும்.

* சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டு வர, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றிற்கு நிவாரணம் கிடைக்கும்.

* அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்த சுத்தியும், இரத்தவிருத்தியும் ஏற்படும். நரம்புத்தளர்ச்சியும் நீங்கிவிடும்.