துயரம் சூழ்கையில்
வலிகளை கண்டு
துவண்டு விட்டால்
தோற்றுப் போவோம்
துயரம் சூழ்கையில்
அறிவில் நிதானமும்
சிந்தையில் நம்பிக்கையும்
உடலில் பலமும் கொண்டு
நிமிர்ந்து நில்
துயரம் உன்னை கண்டு
வெருண்டோட
துயரம் எதுவாயினும்
சுயத்தை இழக்காதீர்கள்
கற்றநம் கல்வி அறிவு - தானே
நம்மை மூடரென சொல்லிடாமல்
கல்வியால் பெற்ற உயர்வுக்கு
உண்மையாய் இருங்கள் இதயத்தில்
சுயத்தையும் அறிவையும்
உயர்வுக்காய் இழக்காதீர்கள்
அடையாளம் அற்று ஆதரவின்றி
தொலைந்து போவீர்கள்
துயரம் கண்டு அழுவதும்
வதைவதும் பசித்திருப்பதும்
அழிவை விரும்பி அழைக்கும் செயல்
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே