3/145 காத்திருக்கும் மூவுயிர் நான்
நான் குமரியல்ல
தாய்மையின் விளிம்பில்
கோவம் கர்வம் பகை
பழியென ஏதுமில்லை
மனதில் நல்லெண்ணங்களோடு
எனைமறந்து
கர்ப்ப ஸ்திரி தெய்வமெனும்
வாக்கை ஏற்று
தீமை களைந்து
நன்மையில் சிந்தை நிலைக்க
எனக்கொரு மகன் பிறப்பான்
என் உயிரைப்போல பிறப்பான்
ஊர்போற்ற பேரெடுப்பான்
தந்தையின் அறிவு கொண்டிருப்பான்
அவரது நற்பண்பு காத்து நடப்பான்
அன்னையின் வளர்ப்பே
சிறந்ததெனும் பரிசளிப்பான்
வீட்டிலே மகிழ்வின் விம்பமாயிருப்பன்
தாத்தாக்கள் பாட்டியரின்
பேரானந்த மாயிருப்பான்
மாமாக்கள் மாமியரின் நஸ்ரமில்லா
நல் மருமகனாயிருப்பான்
பெரியப்பா பெரியம்மாக்களின்
எல்லையில்லா செல்லமாயிருப்பான்
அன்னை தந்தையின் எல்லாமுமாயிருப்பான்
புளகாங்கிதம் கொண்டு
தவத்தின் பலன்கண்டு
குமரிப் பருவம் தொலைத்து
தாய்மை சிறப்பெய்ய
காத்திருக்கும் மூவுயிர் நான்
வளைகாப்பு பிறந்த வீட்டில்
பிரசவம் பிறந்த வீட்டில்
ஓருயிரை பிரிந்து ஈருயிராய் போகேன்
மூவுயிரும் ஒன்றென வாழும் வீட்டில் விட்டிடுங்கள்
வளைகாப்பு பெண்வீட்டின் பெருமையின் மகிழ்வு
பிரசவம் பிறந்த வீட்டிலெனும் பொய் யார்மகிழ
இவற்றில் எல்லாம் மகிழ்வில்லை பிரிவதில் வலியே
பேறுகாலத்தில் துணைவன் தரும்
அன்பை ஆறுதலை அரவணைப்பை
யார் தருவார் அவரை அன்றி
கருவறையில் உயிர் கொண்டமுதல்
அவர் கொண்ட அக்கறை
ஆழியிலும் அதிகம் விட்டிடுங்கள்
வளக்கமென பிரிக்காமல்
மகிழ்ந்து நாமிருப்போம் நீங்களும் எங்களுடன் வருகவே
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே