அன்புடையார் தரும் வலியும் சுகம்
நான் ஒரு மீனை பாத்தேன்
அதன் கண்களில் கலக்கம்
தொட்டியில் இருந்து வெளியே
எடுத்தேன் ஆறுதல் சொல்ல
இறந்துபோனது
வலிக்கும் பிள்ளைக்கு வாழும்
வீட்டிலேயே வாழ்வை கற்பியுங்கள்
பிரித்தெடுத்து பாடம் ஓதும் செயல்
இறந்த மீனின் வாழ்வுபோல் ஆகும்
நிதானமாக உற்றுப் பாருங்கள்
மீன்கள் அழுவது தெரியும்
நீரிலே வாழ்வதனால் மீன்கள்
அழுவதே இல்லையென்றால் - தவறு
கண்ணீர் வெளியே தெரிவதில்லை
என்பதே உண்மை எனவே
அழாத கண்களும் வலிக்காத மனதும்
உலகில் இல்லவே இல்லை
வலியோ மகிழ்வோ இருக்கும்
இடத்தில் இருப்பதே சிறப்பு
அன்புடையார் தரும் வலியும் சுகம்
விரும்பாதவர் தரும் அன்பும் துக்கம்
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே