புனிதமான நம் பயணம் தொடங்கும் நாள்
இன்று
இனிதே தொடங்க வேண்டும் நம் இல்லற
பயணத்தை
உன் வெட்கத்தையும் , சந்தோஷத்தையும்
காண போகிறேன் ...
வெங்காயம் கூட வேண்டாம் கண்ணே
நம் சமையல் அறையில் - உன் கண்ணில்
நீர் வர வைக்கும் என்றால் ...
பத்து மாதம் தாய் சுமந்தாள் உன்னை
இருவது வருடம் தந்தை சுமந்தார் உன்னை
இனி இருக்கும் வருடம் உன்னை சுமப்பேன்
நான் என் இதயத்தில் அன்பே
ஜாதிகள் இல்லை நம்மில்
காதல் மட்டும் நம் கண்ணில்
கொஞ்சிட ஒரு ஆண் குழந்தை
கொஞ்சுவதை மிஞ்சிட ஒரு பெண் குழந்தை
போதுமடி நமக்கு மிஞ்சி இருக்கும் காலம் கடந்திட
செல்ல செல்ல கோபங்கள் இருக்கும்
சின்ன சின்ன சண்டைகள் கடக்கும் -ஆனால்
என் கை விரல் இடுக்குகள் உன் கை கோர்த்து
என்றும் இருக்கும் உன்னுடன் ....
பிரிக்க முடியாத சொந்தம்
தொடரட்டும் நம் பந்தம்
பல யுகங்கள் கடந்தும்
வாழ்வோம் வா