Author Topic: ஆண் மகனின் காதல்  (Read 846 times)

Offline JeSiNa

ஆண் மகனின் காதல்
« on: April 15, 2017, 09:38:23 PM »
அழகான  அழகை 
கொட்டி  வைத்த ஓவியமே ...
உன்னை  வரைந்த  கடவுளுக்கு  நான்
எப்படி  நன்றி  சொல்வது ...?
உன்  கருமையான  இமைகளை 
பார்த்து  விழுந்தேனடி ...

காரணமே  இல்லாமல்   காதலிக்கிறேன்   
என்  காதலியாக  வருவாயா ....?

உன்  விரல்  கோர்த்து 
உன்  கண்களை  பார்த்து 
உன்  மடி  சாயவே 
என்  தாய்  முகத்தை கண்டேன் ...

என்  இதயம்  துடி  துடித்து  போகின்றது 
உன்னை  காணா  விட்டால் 
என்  இதய  துடிப்பாய்  வந்து  விடடி
வாழ்நாள்  முழுவதும்  உன்  இதயத்தை 
நான்  சுமக்கிறேன்

வாழ்க்கை  முழுவதும் 
உன்னை  மட்டுமே  நேசிக்க  வேண்டும் ...
இரண்டு  உலகிலும்  நான்  தோள் சாய 
உன்  தோள்  வேண்டும்  பெண்ணே ...


அருகம்புல்  போல  என் காதலை 
வளர்த்துக்கொண்டிருக்கும் பொழுது...
அவள்  அப்பன்  எருமை  மாடு போல 
மேய்ந்து  விட்டான் ..
என்ன செய்வது  எல்லாம்  விதி 
ஆண்டவன்  செய்த  சதி...

« Last Edit: April 20, 2017, 11:26:39 PM by JeSiNa »

Offline MyNa

Re: ஆன் மகனின் காதல்
« Reply #1 on: April 19, 2017, 05:10:43 AM »
Vanakam jesina.. Kavithai superb  :D
Smooth ah poitu iruntha story la last la oru twist..
Nalla kanavu kaanum pozhuthu thidirnu muzhichu ezha vaikira twist ;) Vithayasamaana karpanaila azhagana kavithai.. vazhthukal jesina
:)


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: ஆன் மகனின் காதல்
« Reply #2 on: April 19, 2017, 09:18:15 PM »
வணக்கம் தங்கையே...

உனது கவிதைகளில் இது
மிக மிக சிறப்பானது.....
பயணங்கள் தொடங்கி
குறுகலான காலத்திலே
பெரும் முன்னேற்ற மாற்றமதை காண்கின்றேன்...

உனது கவிதைகளையோ
யாரது கவிதைகளையுமோ
அகல உயர ஆழங்களை அளக்க
எனக்கு தகமையும் இல்லை தெளிவும் இல்லை

ஆனால் நான் படித்த உனது கவிதைகளில்
இந்த கவிதை தனிச்சிறப்புடன் உயர வளர்ந்துள்ளது.....


தமிழை நீ நேசி... கவிதைகளின் அரசியாவாய்.....
எனது வாழ்த்துக்கள் பலிக்கும் என்றால்
மனதார வாழ்த்துகின்றேன்.....
உன் வாழ்வும் ஒளிமயமக..... வாழ்க வளமுடன்.
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline thamilan

Re: ஆன் மகனின் காதல்
« Reply #3 on: April 20, 2017, 06:18:50 AM »
உங்கள் தலைப்பு சரியா என்று பாருங்கள் ஜெஸினா . அது ஆண்மகனின் காதல் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் ஆன் மகனின் காதல் என்று எழுதி இருக்கிறீர்கள். உங்களுக்கு நான் சொல்வது சரி என்று பட்டால் அதை மாற்றுங்கள்

Offline JeSiNa

Re: ஆண் மகனின் காதல்
« Reply #4 on: April 20, 2017, 11:24:54 PM »
Thnx Sari Na... Thamilan na... And MyNa
« Last Edit: April 20, 2017, 11:31:01 PM by JeSiNa »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: ஆண் மகனின் காதல்
« Reply #5 on: April 21, 2017, 12:03:33 AM »
Jesi chllm ;D kavithai super :D yaroda peelinga inga eluthiruka nu enaku therium ;D supera eluthiruka:) vazhthukkal chllm:)

Offline JeSiNa

Re: ஆண் மகனின் காதல்
« Reply #6 on: April 21, 2017, 12:10:31 AM »
Hy yaroda beelingu di :o enaku theriyama unaku epdi theriching ::)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ஆண் மகனின் காதல்
« Reply #7 on: April 21, 2017, 10:09:35 AM »
வணக்கம் ஜெஸினா ....

அழகான கவிதை ....

'' அருகம்புல்  போல  என் காதலை 
வளர்த்துக்கொண்டிருக்கும் பொழுது...
அவள்  அப்பன்  எருமை  மாடு போல 
மேய்ந்து  விட்டான் ..
என்ன செய்வது  எல்லாம்  விதி 
ஆண்டவன்  செய்த  சதி...''
இந்த வரிகளை படிக்கும்போது
சிரிப்பு வந்தாலும் ...அதை
அனுபவித்தவர்களுக்கு அது தாங்க முடியாத
வலியாக இருந்திருக்கும் ....

நல்லதோர் முயற்சி ...!!!
அருமையான கவிதை ..!!!
அழகான வரிகள் ...!!!
தொடரட்டும் கவிப்பயணம் ....
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!


Offline JeSiNa

Re: ஆண் மகனின் காதல்
« Reply #8 on: April 21, 2017, 10:31:28 AM »
Rithu ma DankQ :)

Offline AnoTH

Re: ஆண் மகனின் காதல்
« Reply #9 on: April 21, 2017, 12:06:50 PM »
தங்கை Jesina ,

FTC பொது மன்றத்தில் தங்களுடைய படைப்புகள்
இடம் பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இன்றைய காலங்களில் தமிழ் மொழியில்
எழுதப்படக்கூடிய படைப்புகள் வரவேற்கத்தக்கவை
அவ்வகையில் தங்களுடைய கவியாற்றலைக்கண்டும்
பெருமை கொள்கின்றேன். காதல் கவிதை என்றால்
வர்ணனைக்கு பஞ்சம் இருப்பதில்லை
அதே போல தங்கள் கவியிலும் சிந்தை சிறப்பு.

இறுதி வரிகள் அதி சிறப்பு அதில் எழுந்தது என் முகத்தில் ஓர் சிரிப்பு

வாழ்த்துக்கள்.

Offline JeSiNa

Re: ஆண் மகனின் காதல்
« Reply #10 on: April 22, 2017, 01:04:40 PM »
thnx anoth na :)

Offline DeepaLi

Re: ஆண் மகனின் காதல்
« Reply #11 on: April 23, 2017, 02:21:39 PM »
hi jesina sister vanakkam..
romba alagana varigal..
ungaloda  poems pakave foruum varalam..
every lines are interesting..
super akka..
keep writting.....

Offline JeSiNa

Re: ஆண் மகனின் காதல்
« Reply #12 on: April 25, 2017, 03:30:44 PM »
 :-* thnx deevali :)

Offline ChuMMa

Re: ஆண் மகனின் காதல்
« Reply #13 on: April 25, 2017, 03:37:09 PM »
HAHA "erumai maadu pol" (room pottu yosicheengala)

Nalla thaane poi kittu irundhichi kavithai
aanal kadaisiyil uvamanam siripai vara vaithaalum

kavithaiyil ulla vali ...vazhi pokaaga poi vidugirathu

Maatrungalen uvamanathai paarpom ungal kavi gnaanam (ஞானம் )   :D :D


Vaazthukkal



En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline JeSiNa

Re: ஆண் மகனின் காதல்
« Reply #14 on: April 25, 2017, 11:02:24 PM »
Hahaha ;D chumma na thnx :)