Author Topic: எனது மொழிபெயர்ப்பு  (Read 399 times)

Offline thamilan

எனது மொழிபெயர்ப்பு
« on: April 09, 2017, 06:20:01 AM »
தூரங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது பாதையானது
பாதைகளை நான் மொழிபெயர்த்தேன்
அதில் எனது பயணம் தொடர்ந்தது

வாசனைகளை நான் மொழிபெயர்த்தேன்
அது பூக்கள் ஆனது
பூக்களை நான் மொழிபெயர்த்தேன்
அது வேர்களின் வலிமையை சொன்னது

எண்ணங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது கவிதையானது
கவிதையை நான் மொழிபெயர்த்தேன்
அது எனக்கு முகவரி தந்தது

பசுமையை நான் மொழிபெயர்த்தேன்
அது பயிரானது
நெடற்பயிர்களை நான்  மொழிபெயர்த்தேன்
அது உழவரின் உதிரமானது

தோல்விகளை நான்   மொழிபெயர்த்தேன்
அது தொடர்ந்தது
தொடர்ந்து நான்  மொழிபெயர்த்தேன்
அது வெற்றியை வாங்கித் தந்தது

துன்பங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது அனுபவமானது
அனுபவங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது ஞானம் ஆனது

உணர்வுகளை நான் மொழிபெயர்த்தேன்
அது வார்த்தைகள் ஆனது
வார்த்தைகளை நான் மொழிபெயர்த்தேன்
என் பேனாவில் மை தீர்ந்தது!!!
 

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: எனது மொழிபெயர்ப்பு
« Reply #1 on: April 14, 2017, 07:25:30 PM »
வணக்கம் தமிழன் சகோ.....

அழகிய மொழிபெயர்ப்பு.....
வாழ்த்துக்கள்.....

எது எப்படியோ.....
உங்கள் ஆக்கங்கள் என்னும் என்னும்
அதிகமாய் வேண்டும்..... எனவே.........
பேனாவில் மை ஊறட்டும்..... 
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....