Author Topic: ~ வெண்டக்கா புளி குழம்பு ~  (Read 416 times)

Offline MysteRy

வெண்டக்கா புளி குழம்பு



வெண்டக்கா – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 15
பூண்டு – 3 பல்லு
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 1
கருவேப்பிலை – 8
புளி – அளவா சின்ன உருண்டை
எண்ணெய் – 4 ஸ்பூன்
தேங்காய் – 5 சீவல்

கடுகு , வெந்தயம் , கடலை பருப்பு , மஞ்சள் , கொத்திமல்லி பொடி, மிளகாய் பொடி , உப்பு தேவையான அளவு எடுத்துக்குங்க .
முதல்ல வெண்டக்காயை நல்லா கழுவுங்க , கழுவுனுதுக்கு அப்புறம்
ஒரு துணி எடுத்து எல்லா வெண்டக்காயையும் ஈரமில்லாமல் தொடச்சுருங்க,,, இல்லாட்டி வழு வழுன்னு இருக்குமுங்க ……
இப்போ புளியை ஒரு சின்ன குண்டாவில் போட்டு சுடு தண்ணிலெ கரைச்சு தனியா எடுத்து வச்சுருங்க .
வடச்சட்டியில் எண்ணெய் ஊத்தி கடுகு , கடலை பருப்பு . கொஞ்சோண்டு வெந்தயம் போடுங்க போதும் ….கடுகு , பருப்பு பொருஞ்சு வந்ததுமே அதுல
பாதி பாதியா அருஞ்ச வெங்காயம் , பூண்டு , பச்சை மிளகாய், வர மிளகாய் ,கருவேப்பிலை எல்லாம் போட்டு ,, நல்லா தொலாவி தாளிச்சு விடுங்க,,, ரெண்டு நிமிஷம் கழிச்சு சிறுசா ரவுண்டு ரௌண்டா
அருஞ்சு வெச்சுருக்கிற வெண்டக்காயை வெங்காயத்துடன் சேர்த்து
உப்பு , மஞ்சபொடி , மிளகா பொடி, கொத்துமல்லி பொடி எல்லாம் சேர்த்து நல்லா கெலரி அஞ்சு நிமிஷம் விடுங்க…..இப்போ தக்காளியை அருஞ்சு போட்ருங்க ,, இது கூட கரைச்சு வெச்சிருக்கிற புளியை சேர்த்து ,, ரெண்டு கொதி விடுங்க …
உங்களுக்கு விருப்பம் இருந்தா தேங்காய் கொஞ்சம் மேலா ல போட்டுக்கலாம் ,,,,,,,
கொழம்பு சூடு ஆருனதுக்கு அப்புறம் சுடு சாப்பாட்டில் பிணஞ்சு சாப்புடுங்க ,,,, அதுதானுங்க நம்ம ஊரு கொங்கு நாட்டு வெண்டக்கா புளி குழம்பு !!!!!
வெண்டக்கா சாப்பிட்டால் ,,கணக்கு நல்லா பண்ணுவாங்களா !!
நான் சொன்னது கூட்டல் கழித்தல் கணுக்குங்க