பெண் குழந்தை வரம் தான் ...
புன்னகையால் நம் கவலைகளை மறக்க
கடவுள் மண்ணுக்கு அனுப்பி வைத்த
வரம்
பெண் குழந்தை வரம் தான் ...
தன் எதிர்காலம் மறந்து
உன் நிகழ்கால மகிழ்ச்சி பற்றி மட்டுமே
சிந்திப்பதால்
பெண் குழந்தை வரம் தான் ...
தனக்கான உணவையும் தன் பிள்ளைகளுக்கு
கொடுத்து தன் பசியாற்றுவதால்
பெண் குழந்தை வரம் தான் ...
அம்மா , அக்கா ,தங்கை , மனைவி
உறவுமுறை எது கொண்டு நீ அழைத்தாலும்
அன்புடன் நேசிக்க மட்டும் தெரிவதால்
பெண் குழந்தை வரம் தான் ...
கள்ளி பால் கொடுத்து நீ அழிக்க நினைத்தும்
உன் நலம் காக்க வாழ்வதால் ..
பெண் குழந்தை வரம் தான் ...
வெறும் வார்த்தைகளில் மட்டும் அல்ல
நம் வாழ்விலும் தான் !