Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ சம்மர் ஸ்பெஷல்! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ சம்மர் ஸ்பெஷல்! ~ (Read 611 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226673
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ சம்மர் ஸ்பெஷல்! ~
«
on:
April 03, 2017, 08:32:18 PM »
சம்மர் ஸ்பெஷல்!
நறுக்கிய கிர்ணிப்பழம் துண்டுகள் - 1 கப், நீங்கள் விரும்பும் பழத்துண்டுகள் - 1 கப் மற்றும் ஐஸ் கட்டிகள் - 1 கப் ஆகியவற்றை மிக்சியில் போட்டு, நுரைக்க அடித்து பரிமாறவும். இதனுடன், தண்ணீர் சேர்க்க வேண்டாம். விரும்பினால், 1 சிட்டிகை சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.
ஸ்வீட் லஸ்சி!
இரண்டு கப் கெட்டி தயிரை, மெல்லிய துணியில் போட்டு, கட்டி தொங்க விடவும். தண்ணீர் முழுவதும் வடிந்ததும், அதை அகலமான பாத்திரத்தில் மாற்றி, இரண்டு மேஜைக்கரண்டி சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து கரண்டியால் நன்றாக அடிக்கவும். பின், சிறிதளவு, ஏலக்காய் தூள் சேர்த்து, பரிமாறவும்.
மேங்கோ லஸ்சி!
இரண்டு கப் கெட்டி தயிரை, துணியில் கட்டி தொங்க விட்டு, தண்ணீரை முழுவதுமாக வடிக்கவும். அதனுடன், தோல் நீக்கி, நறுக்கிய மாம்பழ துண்டுகள், 1 கப் சேர்த்து, நன்றாக அடிக்கவும். இதனுடன், 1 தேக்கரண்டி, மேங்கோ எசன்ஸ் சேர்த்து கலந்து, பரிமாறவும்; மேங்கோ எசன்சுக்கு பதிலாக, 1 தேக்கரண்டி, வெண்ணிலா எசன்சும் சேர்க்கலாம்.
திராட்சை ஜூஸ்!
திராட்சை ஜூஸ் - 1 கப், திராட்சைப் பழம் - அரை கப், ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் - 1 கப், எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி, புதினாச் சாறு - 1 மேஜைக்கரண்டி மற்றும் ஐஸ் கட்டிகள் இரண்டு கப். இவைகளை ஒன்றாக மிக்சியில் போட்டு, நுரைக்க அடித்து, ப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
வெள்ளரிக்காய் - வேர்க்கடலை சாலட்!
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - இரண்டு கப், கரகரப்பாக பொடித்த வேர்க்கடலை - 1 கப், தேங்காய் துருவல் - அரை கப், மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் தலா ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு ஒரு மேஜைக்கரண்டி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை, ஒரு கைப்பிடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஒருமணி நேரம், பிரிட்ஜில் வைத்து, எடுத்து பரிமாறவும்.
* முலாம்பழத்தின் விதைகளை நீக்கி, துண்டுகளாக்கி, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து, ஜூசாக்கி பருகலாம்.
* நுங்கை தோல் நீக்கி, பால் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி, ஏலக்காயுடன், சர்க்கரை சேர்த்து பருகினால் வெயிலுக்கு இதமாக இருக்கும்.
* சப்போட்டா பழத்தை தோல் மற்றும் விதையை நீக்கி, சிறிது பாலும், தண்ணீரும் சேர்த்து, மிக்சியில் அடித்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்து பருகினால், ரத்தம் விருத்தியாகும்; மலச்சிக்கல் வராது.
* மாம்பழத்துடன், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, மிக்சியில் அடித்து பருக, உடலுக்கு மிகவும் நல்லது.
* இரண்டு, மூன்று பழ வகைகள் இருந்தால், எல்லாவற்றையும், சிறு சிறு துண்டுகளாக்கி, சிறிது சர்க்கரை, மில்க்மெய்டு கலந்து, பிரிட்ஜில் வைத்து, தேவையான போது எடுத்து சாப்பிடலாம்.
* கோடை காலத்தில் ஐஸ்கட்டியால், முகத்திற்கு ஒத்தடம் கொடுத்தால், முகம் பொலிவுடன் இருப்பதுடன், உஷ்ணம் காரணமாக ஏற்படும் சரும பாதிப்புகள் வராது.
* வற்றலை வெயிலில் காயப் போடும் போது, வற்றலுக்கு இடையிடையே காய்ந்த சிவப்பு மிளகாய்களை வைத்தால், வற்றல் இருக்கும் பக்கம், காகம் எட்டிப் பார்க்காது.
* ஜவ்வரிசி அல்லது அரிசி கூழ் கிளறும் போது, கசகசாவையும் ஒன்றிரண்டாக பொடி செய்து போட்டு கிளறி, வடாம் இடலாம்; பொரிக்கும் போது, தனி மணமும், சுவையும் இருக்கும்.
* வற்றல் மாவுக்கு, புளித்த மோர் அல்லது எலுமிச்சம் பழச்சாறு விடுவதற்கு பதிலாக, ஒரு மாங்காயை வேக வைத்து, தோல் நீக்கி மசித்து, கூழில் சேர்க்கலாம்; நெல்லிக்காயை அரைத்தும் சேர்க்கலாம், விட்டமின் சி உள்ள வற்றல் தயார்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ சம்மர் ஸ்பெஷல்! ~