என் மனதின் ஆசைகள் புரியாதோ
காத்திருப்பேன் என தெரியாதோ
நின் வதனம் காண தவித்திருப்பேன்
என அறியாயோ
இன்சொல்லில் எனை அமிழ்த்திட
வாராயோ
உனைக்காணாது ஏங்கிடும் என் மனம் சொல்லாதோ
உயிருடனிருந்தும் நடைப்பிணமாய்
நான் வாழ்வதை
தாயின் அழைப்பொலி கேளாமல்
திகைத்து நிற்பவளின்
இதயம் திக்கற்று போனதை
தலைவனை நினைத்து
தலையணை நனைத்து
கரைபுரண்ட வெள்ளத்தால்
கறை கண்ட கன்னமும்
உள்ளமும் வெதும்பி கரைவதை
தந்தை அறிவாரா
சிந்தை சிறந்த செல்ல மகளின்
அன்பைக் கொண்டவனை
பெற்றவள் அறிவாளா
பற்றற்ற மகளின் மனதை
பற்றிக்கொண்ட காதல் கொடியை
அண்ணன் தான் அறிவானா
உண்ணாநோன்பு நூற்கும் தங்கையின்
மனங்கொண்ட மணவாளனை
வாழ்ந்தால் உன் மனதில்
வீழ்ந்தால் நின் மடியில்
என
கொலுவீற்றிருக்கும்
இக்கோலமயிலின் கோலத்தை
கடுந்தவத்தை
கலைத்திட
நீ
வருவாயோ
<3 <3 <3