Author Topic: பிஸ்கட், கேக் சாப்பிடும் பெண்களுக்கு  (Read 988 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
வாரத்தில் 3 நாட்கள் பிஸ்கட், கேக் சாப்பிடும் பெண்களை கருப்பை புற்றுநோய்
தாக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. பெருகிவரும் அறிவியல் தொழில்நுட்பம்
மற்றும் விவசாயத்தில் இரசாயன கலப்பு போன்றவை மனித குலத்திற்கு பல மறைமுகமாக  புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களை ஏற்படுத்துகிறது.

இந்த புற்றுநோய் எவ்வாறு வருகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் இது  குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. இது தொடர்பான
ஆராய்ச்சி ஒன்று சுவீடன் நாட்டு பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட போது பல புதிய
தகவல்கள் வெளியாகி உள்ளன.
   

சுவீடன் நாட்டில் உள்ள சுமார் 60,000  பெண்களிடம் அவர்களின் கடந்த 10 ஆண்டு கால உணவு பழக்க முறைகளை மையமாக கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இது வரை வெளிக்கொண்டு வரப்படாத பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி வாரத்தில் மூன்று  நாட்கள் கேக் மற்றும் பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு மற்றவர்களை விட 33 சதவீதம் அதிகம் இந்த கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. வாரத்திற்கு 3 நாட்களுக்கு மேல் சாப்பிடும் பெண்களுக்கு
இது 44 சதவீதமாக அதிகரித்துள்ளது.  :'( :'(


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

இந்த இரண்டுமே நான் சாப்டுவதில்லை ... சோ நா தப்பிச்சேன்