என்
ஒவ்வொரு ராத்திரியும்
உன்
கனவுகளுடன்தான்
என்
ஒவ்வொரு விடியலும்
உன்
நினைவுகளோடுதான்
என்
ஒவ்வொரு வார்த்தையும்
உன்
பெயரோடுதான்
என்
ஒவ்வொரு பாத அடியும்
உன்னை
நோக்கித்தான்
என்
ஒவ்வொரு நொடியும்
உன்னை
எதிர்பார்த்துதான்
என்
கவிதையின் ஒவ்வொரு எழுத்தும்
உனக்காகத்தான்
என்
வாழ்வின் லட்சியமும்
உன்னோடு
வாழத்தான்