நீ இல்லை அசிங்கம்.....
இரசிக்க மனதுண்டானால்...
புல்லும் களையும் கூட..... பேரழகுதான்...
உன்னை யாரும் இரசிக்க மறுத்தாலோ.....
இல்லை அசிங்கம் என்று சொன்னாலோ.....
நீ இல்லை அசிங்கம்.....
அவரவர்.....
உள்ளத்தின் எண்ணங்களே அசிங்கம்.....
நாம் ஒருவரை.....
அவலட்சணமென இகழ்கையில்.....
அவமானம்.....
அவலட்சணத்தை படைத்த கடவுளுக்கே.....
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே