வெளியேறுவதெல்லாம் தொலைந்து போகின்றன
பூவில் இருந்து
மனம்
புல்லாங்குழலில் இருந்து
இசை
உன்னில் இருந்து
நான்.......
காதல் ஒரு பரிதாபமான
சூதாட்டம்
உன்னை அடைய வேண்டுமானால்
என்னை இழக்க வேண்டும் .........
உன் கண்களை
மீன் என்கிறார்கள்
மீன் வலை வீசுகிறதே .......
மனமே!!
நீ ஒரு மாயவலை
அதில் விழும் சிலந்தி அல்ல
துடிக்கிறது - வலை தான்
சிலந்தியை எண்ணி துடிக்கிறது ......