Author Topic: உனக்காக நான் .........  (Read 493 times)

Offline thamilan

உனக்காக நான் .........
« on: March 26, 2017, 01:29:02 PM »
காற்றாகிறேன்
உன்னைத் தொடரும்
காற்றாகிறேன்
நீ சுவாசிக்க......

நீராகிறேன்
உன் பின்னால்
ஓடிவரும் நீராகிறேன்
நீ பருக.........

வானாகிறேன்
உன்னால் மடித்துவிட முடிகிற
வான் ஆகிறேன்
உனக்கு நிழல் தர.........

நிலமாகிறேன்
நீ நடந்து செல்லும்
நிலமாகிறேன்
உன்னைத் தாங்கிக் கொள்ள........

நெருப்பாகிறேன்
நீ தொட்டு ரசிக்கும்
நெருப்பாகிறேன்
உனக்கு ஒளி தர ......

உனக்காக
என்ன வேண்டுமானாலும் ஆகிறேன்
நீ எனக்கே ஆவதென்றால்.............

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: உனக்காக நான் .........
« Reply #1 on: April 08, 2017, 05:20:21 PM »
தமிழன் சகோ.....

கவிதை தியாகமாக நிற்கிறது
அன்புக்காய்... அவளுக்காய் ஏங்கி..... 

அழகி விண்ணப்பம் கவிதை.....

வாழ்த்துக்கள் சகோதரா.....
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....