பார்த்த நாளும்,நேரமும்
மறைந்தே போயின
அன்பானவன் அன்பில்
கரைந்தே நித்தமும்
சித்தம் கலைகிறேன்
ஊண்,உறக்கமின்றி
என்றும் அவனுடன்
இருக்க விழையும் நெஞ்சத்தில்
தஞ்சமடைந்திட்ட என்னவனை
உள்ளம் கவர் கள்வனை
கண்ணின் இமையாய்
காத்திட எண்ணி சிறை பிடித்தேன்
இமை மூடிய என் விழிகளில்
கண்ணீரில் கரைந்தே போவாயோ
என்றெண்ணியே
வறண்டது விழிகளும்
முடிவின் முடிவு தேடியே!!!