Author Topic: ~ பி.சி.ஓ.எஸ்.விரட்டும் உணவுகள்! பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும்!! ~  (Read 534 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226673
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பி.சி.ஓ.எஸ்.விரட்டும் உணவுகள்! பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும்!!

உடல் பருமன், உடலெங்கும் தேவையற்ற ரோம வளர்ச்சி, முறை தவறிய மாதவிலக்கு, குழந்தையின்மைப் பிரச்னை... இப்படி சங்கிலித்தொடர் போல பல பிரச்னைகளுக்கும் காரணமாகிறது பிசிஓஎஸ் (பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்) என்கிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னை. மருந்துகளும் மாத்திரைகளும் ஓரளவுக்கு உதவினாலும், இலவச இணைப்பாக பக்க விளைவுகளையும் கொடுக்கத் தவறுவதில்லை. உணவே மருந்து என்கிற அடிப்படையில், பிசிஓஎஸ் பிரச்னையையும் அணுகலாம். சிலவகை உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் பிசிஓஎஸ் பிரச்னையை வரவிடாமல் தடுக்கவும், வந்த பிறகு தீவிரம் குறைக்கவும் முடியும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?

வெந்தயம்

மூன்று டீஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டீஸ்பூன் தேனுடன் உட்கொள்ளவும். மதிய உணவுக்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும், இரவு உணவுக்கு முன் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் சாப்பிடவும். உடலின் வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தக்கூடியது வெந்தயம். சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவரும். பருமனைக் குறைக்கும். பிசிஓஎஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226673
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சால்மன் மீன்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள மீன் இது. வாரம் ஒன்றிரண்டு முறை இந்த மீனை உண்பதால், கெட்ட கொழுப்பு குறைகிறது. இதயம், ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும். பருமன் குறைவதால் பிசிஓஎஸ்சின் தீவிரமும் குறையத் தொடங்கும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

கால் கப் வெந்நீரில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, காலை உணவுக்கு முன் குடிக்கவும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இன்சுலின் தாங்குதிறனை முறைப்படுத்துகிறது. அதனால் டெஸ்ட்டோஸ்டீரான் என்கிற ஹார்மோன் சுரப்பும் குறைந்து, பிசிஓஎஸ் பிரச்னை சரியாகிறது.

கடுக்காய் பொடி

ஒரு டீஸ்பூன் கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து, இரவு தூங்கச் செல்வதற்கு முன் குடிக்கவும். இது மலமிளக்கியாகப் பயன்படுவதால், குடல் சுத்தமாகும். வளர்சிதை மாற்றம் சீரடையும். ஆண்ட்ரோஜென் என்கிற ஆண் ஹார்மோன் சுரப்பைக் குறைத்து, சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையையும் குணப்படுத்தும்.

பசலைக்கீரை, புரோக்கோலி

இந்த இரண்டுமே இரும்புச்சத்து நிறைந்தவை. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக்கூடியவை. உடல் பருமன் இருப்பவர்களுக்கு ஹீமோகுளோபின் பிரச்னை வரும். அதன் தொடர்ச்சியாக ரத்தச்சோகை, முறைதவறிய மாதவிலக்கு, குழந்தையின்மைப் பிரச்னை என எல்லாம் சேர்ந்து கொள்ளும். பசலைக்கீரையையும் புரோக்கோலியையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும்.

புதினா சேர்த்த கிரீன் டீ

பால் சேர்த்த காபி, டீக்கு பதிலாக கிரீன் டீ குடிப்பதையும், அதில் புதினா சேர்ப்பதையும் பழக்கிக் கொள்ளலாம். சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது இன்னும் சிறப்பு. இதயத்தின் சீரான இயக்கத்துக்கும், பருமனைக் குறைக்கவும் இந்த டீ உதவும்.

பட்டைத் தூள்

ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை அரை டம்ளர் வெந்நீரில் கரைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். இன்சுலின் தாங்குதிறன் முறைப்படும். கொழுப்பின் அளவு குறையும். வளர்சிதை மாற்றம் சீராகும். ரத்த அழுத்தம் முறைப்படுத்தப்பட்டு, பிசிஓஎஸ் பிரச்னை நீங்கும்.

ஆளிவிதை

உடல் பருமனும், ஹார்மோன்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இரண்டில் எதில் மாற்றம் நிகழ்ந்தாலும் இன்னொன்றிலும் அது பிரதிபலிக்கும். அந்த வகையில் ஆளிவிதைப் பொடியை சாம்பார், பொரியல் என தினப்படி உணவில் சேர்த்து உண்ணப் பழகும்போது, ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறைகிறது. ஐந்து கிலோ எடை குறைந்தாலே, அது ஹார்மோன்களின் சமநிலையின்மையில் பத்து சதவிகித மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மாதவிலக்கு சுழற்சி முறைப்படுகிறது. பருமன் குறைந்து, ஹார்மோன் சமநிலைக்கு வந்தாலே, பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும்.அம்பிகா சேகர், டயட்டீஷியன்

உடல் பருமனும், ஹார்மோன்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இரண்டில் எதில் மாற்றம் நிகழ்ந்தாலும் இன்னொன்றிலும் அது பிரதிபலிக்கும். அந்த வகையில் ஆளிவிதைப் பொடியை சாம்பார், பொரியல் என தினப்படி உணவில் சேர்த்து உண்ணப் பழகும்போது, ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறைகிறது. ஐந்து கிலோ எடை குறைந்தாலே, அது ஹார்மோன்களின் சமநிலையின்மையில் பத்து சதவிகித மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மாதவிலக்கு சுழற்சி முறைப்படுகிறது. பருமன் குறைந்து, ஹார்மோன் சமநிலைக்கு வந்தாலே, பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும்.