காதல் ஒரு காட்டாறு - அதில்
நீந்தி கரை சேர்ந்தவர்களை விட
அடித்து செல்லப்பட்டவர்களே அதிகம்
காதலுக்கு கண் இல்லை
என்பர் பலர்
காதலுக்கு கண் இருக்கிறது
காதலிப்பவர்களுக்குத் தான்
கண்ணும் இல்லை
காதும் இல்லை
மூளையும் இல்லை
காதல் வந்தால்
கண்கள் தேடித் பார்ப்பதில்லை
மற்றவர் சொல்வத்தை
காது கேட்பத்தில்லை
காதலைத் தவிர
மூளை வேறு எதையும் யோசிப்பதில்லை
காதல் இடம் பார்த்து
காலம் பார்த்து வருவத்தில்லை
அப்படி வந்தால்
அது உண்மையான காதல் இல்லை
உண்மை தான்
காதல் ஒரு
இரசாயனக் கலவை
உணர்ச்சிகளின் பரிமாணம்
உணர்வின் வெளிப்பாடு - அது
யார் மேல் வரும்
எப்படி வரும் என்பது
ஆண்டவனுக்கே தெரியாது
காதல் எப்படியும் வரலாம்
எப்படியும் வரட்டும்
யார் மேலும் வரட்டும் - அந்தக்
காதலை வெளிப்படுத்துமுன்
கண்களைத் திறந்து
காதலிப்பவனைப் பற்றி தேடித் பாருங்கள்
மற்றவர்கள் சொல்வதை
காது கொடுத்துக் கேளுங்கள்
மூளையைப் பாவித்து - அவன்
நல்லவனா கெட்டவனா என்று
யோசித்துப் பாருங்கள்
அதன் பிறகு காதலை சொல்லுங்கள்
அந்தக் காதல்
நிச்சயம் வெற்றி பெறும்