எங்கிருந்தாய் நீ இத்தனை நாளாய்
உன் வருகையால் மாறியதே எம் வாழ்க்கை வேறாய்
மெய்மறந்து நிற்கின்றேன் உன் படைப்புகளில்
என்றும் தொடரட்டுமே அவை நினைவுகளில்
முகம் அறியா பெயர்களை நீ
மனம் அறியும் நண்பர்களாக்கினாய்
உன் இமயம் தொடும் இசையால்
இன்று எம் இதயம் தொடுகின்றாய்
பல்லாண்டு நீ தொடர
பல வாழ்த்துக்கள் சொல்கின்றேன்
கதையினால் தொடங்கிய என் பயணத்தை
உனக்கு கவிதையாய் சமர்ப்பிக்கின்றேன்
**விபு**